விளையாட்டு

IPL போட்டியில் இருந்து விலகினார் ஹரி

(UTV | ஐக்கிய அரபு அமீரகம் ) – ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹரி கர்னி விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10 ஆம் திகதி முடிவடைகிறது.

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் டுபாய் மற்றும் அபுதாபிக்குச் சென்று அடுத்த 7 நாள்களுக்கு நட்சத்திர விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ஹாரி கர்னி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனால் ஐபிஎல் மற்றும் ரி 20 பிளாஸ்ட் ஆகிய இரு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்தைச் சேர்ந்த 33 வயது ஹாரி கர்னி, 8 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related posts

ஐ.பி.எல். போட்டியின் கிண்ணம் – பிரெட்லீ கணிப்பு

வீழ்ந்தது கொல்கத்தா

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)