கிசு கிசு

IPL நடுவரை கடுமையாக விமர்சித்த டோனி மனைவி

(UTV | இந்தியா) – டாம் கர்ரனுக்கு ஆட்டமிழந்ததாக முடிவு வழங்கிய பின் அந்த முடிவை திரும்ப பெற்றதால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷி நடுவரை விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போது தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் டாம் கர்ரனின் துடுப்பு மட்டையை பந்து உரசி சென்றதுபோல் இருந்தது. பந்தை பிடித்த டோனி மேன்முறையீடு செய்தார். நடுவரும் உடனடியாக அவரை ஆட்டமிழக்க செய்தார்.

ஆனாலும் அவர் டி.ஆர்.எஸ்.க்கு மேன்முறையீடு செய்தார். ராஜஸ்தான் ஏற்கனவே அதற்கான வாய்ப்பை இழந்து விட்டதால் டாம் கர்ரன் ஆட்டமிழப்பு உறுதியானது. டி.ஆர்.எஸ். முறையில் அவருக்கு ஆட்டமிழப்பு கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக டோனி நடுவருடன் விவாதித்தார்.

இதுதொடர்பாக டோனியின் மனைவி சாக்‌ஷி நடுவரை டுவிட்டரில் விமர்சித்து இருந்தார். ஆட்டமிழப்பு என்றால் ஆட்டமிழப்பு கொடுங்கள். நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சரியாக செய்யுங்கள்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்த டுவிட்டை சாக்‌ஷி டோனி நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Related posts

29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE

‘ரணிலுக்கு வாய்ப்பளியுங்கள்’

கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய திரைமறைவில் முயற்சி?