விளையாட்டு

IPL தொடரில் இருந்து ப்ராவோ விலகல்

(UTV | துபாய்) – ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணியின் சகலதுறை வீரர் டுவையன் ப்ராவோ அறிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது அவர் காயமடைந்து உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை ஐபிஎல் தொடரின் 40வது போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன.

இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளோடு 6ம் இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளோடு 7ம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

இலங்கை தோல்வி!

மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்