விளையாட்டு

IPL தொடரிலிருந்து மிட்செல் முற்றாக நீக்கம்

(UTV | துபாய்) – நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் (Mitchell Starc) விலகி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

சமீபத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் பந்து வீசிய போது திடீரென காயம் ஏற்பட்டதால் இவர் நான்கு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து, துடுப்பாட்டம் செய்யும் போது ஹைதராபாத் அணி இக்கட்டான நிலையில் இருந்ததால் மீண்டும் அவர் துடுப்பாட்ட செய்ய வந்தார். ஆனால் ஒரே ஒரு பந்து மட்டும் சந்தித்த இவர் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக அதிகாரபூர்வமாக ஐதராபாத் அணி அறிவித்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது சொந்த நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

3 ஓட்டங்களால் வெற்றியை தம் வசப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி

உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

T20 உலகக் கிண்ணத்திற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு