விளையாட்டு

IPL ஏலத்தில் இசுறு உதான

(UTVNEWS | COLOMBO) – 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 13 ஆவது இந்தியன் பிறீமியர் லீக் இருபதுக்கு – 20 கிரக்கெட் போட்டிகளுக்கான அணி வீரர்களை தேர்வு செய்யும் ஏல நடவடிக்கையானது இன்றைய தினம் கொல்கத்தாவில் இடம்பெற்றது.

IPL 2020 Auction List of Retained Players

அவுஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்மின்ஸ் ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார். அவரை கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணி 15.5 கோடி ரூபா (இந்திய) கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இதில் இலங்கை அணியைச் சேர்ந்த சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏலம் போயுள்ளார்.

Related image

அதன்படி இசுறு உதானவை ரோயல் செலஞ்சர்ஸ் அணி 50 இலட்சம் ரூபா (இந்திய) ஏலத்தில் வாங்கியுள்ளது.

இந்த ஏலப்பட்டியலில் 186 இந்தியர்கள், 146 வெளிநாட்டவர் என்று மொத்தம் 332 பேர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்நாட்டு ரசிகர்களுக்கும் அனுமதி

100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் உள்ளனர்

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு