(UTV | இந்தியா) – மன்கட் அவுட் முறை தொடர்பில் முத்தையா முரளிதரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்தது.
அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170 ஆட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது.
மன்கட் முறையில் துடுப்பாட்ட வீரரை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இது குறித்த சர்ச்சை இன்று வரையிலும் நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் பந்துவீச்சாளரும் தற்போதைய சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான முத்தையா முரளிதரன் இதுகுறித்து தெரிவிக்கையில்;
“.. பந்துவீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்வதில் நியாயமற்ற முறைகள் இருக்கக் கூடாது. துடுப்பாட்ட வீரர்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பின்னரும் துடுப்பாட்டத்தில் தவறு செய்வதாக நினைத்தால் நடுவர் அணிக்கு 5 ஓட்டங்கள் குறைத்து தண்டனை வழங்கலாம்’ எனத் தெரிவித்திருந்தார்.