விளையாட்டு

IPL தொடரில் சூதாட்டம்

(UTV | இந்தியா) – ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் போட்டி நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சூதாட்டத்திற்காக தன்னை ஒருவர் அணுகியதாக வீரர் ஒருவர் முறைப்பாடு அளித்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணைய தலைவரான அஜித் சிங் கூறியுள்ளார்.

சூதாட்டத்துக்கு அணுகப்பட்ட வீரர், அவரை அணுகிய நபர் குறித்த தகவலை வெளியிடாத அஜித் சிங், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

ரஷீத்கானுக்கு ஐ.பி.எல்.லில் விளையாட தடை?

மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்