உள்நாடு

IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் அமெரிக்காவுக்கு

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு ஏப்ரல் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புகளின் முடிவு இலங்கை தற்போது அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்களின் உதவியைப் பெறுவதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர் பசிலுடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படவில்லை எனினும், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது