உள்நாடு

IMF பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) பிற்பகல் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விளக்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் Anthony Blinken ஒப்புக்கொண்டார்.

ஜனாதிபதி ஜோ பிடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

IMF ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி பயணம்

உளமார்ந்த நன்றிகள் – புதிய எம்.பியாக தெரிவு செய்யப்பட்ட அஷ்ரப் தாஹிர்

editor

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு

editor