உள்நாடு

IMF பிரதிநிதிகளுடன் இன்று மற்றொரு கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (31) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாட்டை விட்டு வெளியேற உள்ளனர்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான செயற்குழு அளவிலான உடன்பாட்டை எட்டுவதும் அதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதும் இந்த விஜயத்தின் நோக்கம் என சர்வதேச நாணய நிதியம் முன்னர் அறிவித்திருந்தது.

அவர்கள் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி – நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இரு தரப்பினருக்கும் இடையே தொழில்நுட்ப அளவிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

Related posts

TIKTOK படுகொலை : அறுவர் கைது

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேட்கொள்ள முடியாது- செந்தில் தொண்டமான்.