உள்நாடு

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை நாடு எட்டியவுடன் அனைத்து கடன் வழங்குநர்களையும் இலங்கை அணுகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியொன்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

கொள்கைப் பொதி தொடர்பான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்து அடையும் நோக்கத்துடன், IMF இந்த மாத இறுதியில் இங்கு வரத் திட்டமிட்டுள்ளது, அதன் பின்னர் இலங்கை கடனாளர்களை மறுசீரமைக்கத் தொடங்கும் என்று ஆளுநர் கூறினார்.

கடனாளர்களை அணுகுவதற்கான இலக்கையும் கொள்கைகளையும் இலங்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாக அவர் கூறினார்.

பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவது இலங்கையின் நிலைமையை மேம்படுத்தும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

“ஒட்டுமொத்த கடன் இலக்குகள் மற்றும் பணியாளர் நிலை ஒப்பந்தத்தை நாங்கள் அடைந்தவுடன் இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குநர்களை நாங்கள் அணுகுவோம்,” என்று அவர் கூறினார்.

Related posts

மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

 நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவி உயிரிழப்பு

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.