உள்நாடு

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

அதன்படி தற்போது 20-30 நாடுகளுக்கு வழங்கப்படும் அவசர உதவி அதிகரிக்கப்படும்.

ரஷ்யா – உக்ரைன் போர் நிலவரத்தால், உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அவசரகாலச் சட்டத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்கனவே செயற்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி எதிர்வரும் சில தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

ராஜிதவுக்கு விளக்கமறியல்

எகிறும் பெட்ரோல், டீசல் விலைகள்