வணிகம்

IDH மருத்துவமனைக்கு தீயணைப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கி வைத்தியசாலை கட்டமைப்பை பலப்படுத்துகிறது HNB

(UTV|கொழும்பு) –  இலங்கையில் முன்னணியிலுள்ள தனியார் துறை வங்கியான HNB PLC, 68 தீயணைப்பு கருவிகளை நேற்றைய தினம்(15) தேசிய தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு (IDH) நன்கொடையாக வழங்கியது.

COVID-19 வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மட்டுமன்றி தேசிய ரீதியிலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்குள் ஏதாவது தீவிபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு HNB துணைபுரியும் வகையில் இந்த கருவிகளை நன்கொடையாக வழங்கி அதற்கு துணைபுரிகின்றது. இலங்கையின் முன்னணி தனியார் வங்கி, IDH மருத்துவமனைக்கும் மற்றும் அதில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

HNB தலைவர் தினேஷ் வீரக்கொடி, தலைமை இயக்க அதிகாரி டில்ஷான ரொட்றிகோ, தலைமை டிரான்ஸ்போமேஷன் அதிகாரி சிரந்தி குரே, சிரேஷ்ட முகாமையாளர் – பொறியில் – ரொஷான- பெர்னாண்டோ மற்றும் நிலைத்தன்மை பொறுப்பதிகாரி ஷெனல் பெரேரா ஆகியோர் IDH மருத்துவமனைக்கு தண்ணீர் மற்றும் CO2 அடங்கிய 34 தீயணைப்புக் கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த HNB இன் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ‘இவ்வாறான முக்கியமான காலக்கட்டத்தில் சுகாதாரத் துறைக்கு உதவி செய்ய நாங்கள் எங்கள் பங்கிலான எல்லாவற்றையும் செய்யவேண்டியுள்ளதை HNB இல் உள்ள நாம் அனைவரும் உணர்கிறோம். அதேநேரம் மருத்துவமனையில் சிகிச்சையளிபபுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து, நெருக்கடியின் அளவையும் தன்மையையும் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு எந்தவகையிலாவது ஆதரவளிப்போம் என உறுதியளிக்கின்றேன்.’ என தெரிவித்தார்.

IDH பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க – தொற்றுநோய் / IDH ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, சுகாதார அமைச்சின் அதிகரிகளான டொக்டர் அசித்த திசேரா மற்றும் IDH மருத்துவ அலுவலர் திட்டமிடல் டொக்டர் அஸாட் சமாட் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: (இடமிருந்து வலமாக)
HNB தலைவர் தினேஷ் வீரக்கொடி மற்றும் தலைமை இயக்க அதிகாரி டில்ஷான் ரொட்றிகோ ஆகியோர் IDH பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க (மத்தியில்) சுகாதார அமைச்சின் அதிகாரிகளான டொக்டர் அசித்த திசேரா, IDH மருத்துவ அதிகாரி திட்டமிடல் டொக்டர் அஸாட் சமட், ஆகியோருக்கு தீயணைப்பு கருவிகளை வழங்கும் போது தொற்றுநோய் / IDH ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, HNB பிரதம டிரான்போமேஷன் அதிகாரி சிரந்தி குரோ, சிரேஷ்ட முகாமையாளர் – பொறியியலாளர் ரொஷான் பெர்னாண்டோ மற்றும் அலுவலக பொறுப்பதிகாரி நிலைத்தன்மை ஷெனல் பெரேரா ஆகியோர் இருப்பதை படத்தில் காணலாம்.

Related posts

யாழில் 02 உற்பத்தி வலயங்கள்

அரிசி கொள்வனவு செய்யும் போது எச்சரிக்கை

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி