விளையாட்டு

IPL இறுதிப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு தொடர்பில் ரசிகர்கள் அதிருப்தி…

(UTV|INDIA) ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான அனைத்து இணையத்தளமூடான நுழைவுச் சீட்டுகளும் 2 நிமிடங்களில் விற்றுத்  தீர்க்கப்பட்டுள்ளதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. அந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஆசன வசதியுள்ளது. இந்திய ரூபாவில் ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை 9 வகையிலான நுழைவுச்சீட்டுகள் உள்ளன.

இந் நிலையில் இணையத்தளமூடான ‍அனைத்து நுழைவுச் சீட்டுக்களும்  2 நிமிடங்களில் விற்றுத் தீர்த்துவிட்டதாக அறிவித்தது.

குறித்தஅறிவிப்பை கேள்வியுற்ற ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுடன்,  ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related posts

அரையிறுதிக்குள் அவுஸ்திரேலியா

பாகிஸ்தானை பதம் பார்த்த ஆஸி அணியினர்

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings