வணிகம்

HNB AppiGo : வர்த்தக தளம் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் Online வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களின் மத்தியில் கேள்வி அதிகரித்துள்ளதனால், இலகுவாகவும் மற்றும் துரிதமாகவும் e- commerce வசதிகளை அமைக்கும் திறனை ஏற்படுத்தும் HNB AppiGo, மாற்று வலைப்பின்னல் பொருட்கள் மற்றும் சேவைகள் தளத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வர்த்தகர்களின் எண்ணிக்கையை துரிதமாக அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கொவிட் முடக்கல் உச்சமடைந்த காலப்பகுதியில் வர்த்தக பங்குதாரர்கள் 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட AppiGo அன்று முதல் துரிதமாக ஸ்திரத்தன்மையை அடைந்து 70க்கும் அதிகமான வர்த்தகர்கள் அந்தந்த வர்த்தகங்களுக்கு தனித்துவமான e-commerce வசதிகளை அமைக்க முடிந்ததுடன் இணையத்தளம் அமைப்பதற்காக AppiGo உடன் இணைந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்கள் முழுவதிலும் இலங்கையில் e-commerce சூழல் என்றுமில்லாதவாறு மாற்றமடைந்ததோடு அதிகரிக்கக் கூடியதாகவும் இருந்ததை காண முடிந்துள்ளது. முடக்கல் காலப் பகுதிக்குள் எம்மில் பலர் வீடுகளிலேயே முடங்கிய காரணத்தினால் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் சீர்குலைந்தன. என்றபோதிலும் இந்த சீரற்ற நிலைமை எமது வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு online ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

கொவிட் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு பல காலத்திற்கு முன்பே AppiGo தளத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் நாம் அதன் மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி தொற்றுநோய் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் இதனை அறிமுகப்படுத்தினோம். எமது இலக்காக இருந்தது எந்தவிதமான வர்த்தகத்திற்கும் பிரவேசிக்கக் கூடிய விரிவான, இலகுவான மற்றும் துரிதமான online வர்த்தக தீர்வாக செயற்படக் கூடிய மற்றும் முடிந்தளவு இலாபகரமான ஒரு மாதிரியொன்றை பெற்றுக் கொடுப்பதாகும். AppiGo தளத்துடன் தற்போது இணைந்துள்ள வர்த்தகர்களிடமிருந்து சிறந்த பிரதிபலிப்புக்கள் எமக்கு கிடைத்துள்ளமையானது நாம் இந்த நோக்கத்தை சாதித்துள்ளோம் என்பதற்கு பெரிய அத்தாட்சியாகும். என HNBஇன் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

சிறந்த மென்பொருள் மேம்பாட்டு நிபுணர்களான hSenid உடன் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ள AppiGoவை சில க்ளிக்குகள் மூலம் எந்தவொரு வர்த்தகருடன் இணையத்தளத்தின் ஊடாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்களின் Orderகளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற முடிகிறது, அத்தடன் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை விநியோகித்தல்களை கண்காணிக்கும் கட்டமைப்புக்களுக்கு மேலதிகமாக இணைய தளத்தில் கட்டணம் செலுத்துதல்களை பொறுப்பேற்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெல்லும் நடவடிக்கைகள் கூட உருவாக்க முடிவதுடன் அந்தந்த வர்த்தகங்களுக்கு உரிய இணையத்தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வர்த்தகங்களுக்கு இணையத்தளத்திற்கு பிரவேசித்து அவர்களது இணைய வர்த்தக நிலையமொன்றை உருவாக்கி தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் AppiGo ஆரம்பிக்கப்பட்டமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். AppiGo மிகவும் தனித்துவமான செயலியாக கருதப்படுவதற்கு காரணம் ஒவ்வொருவராக தமது வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைந்து வர்த்தக செயற்பாடுகளுக்கு மிகவும் வெற்றியளித்து பலமளிக்கிறது. என hSenid வர்த்தக குழுமத்தின் உரிமையாளர் மற்றும் தலைவர் தினேஷ் சப்பரமாது தெரிவித்துள்ளார்.

இந்த தளத்தை பயன்படுத்தி எந்தவொரு வர்த்தகருடனும் மிகவும் இலகுவாக பதிவு செய்து கொள்ளக் கூடிய விதத்தில் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதுடன் AppiGo பயன்படுத்துவதற்கு விரும்பும் எந்தவொரு வர்த்தகரும் அதற்காக ஆரம்ப பதிவினை online ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவர்களது வர்த்தக இலச்சினை, வர்த்தக பெயரின் வர்ணம், உற்பத்தி மற்றும் விலைப்பட்டியல் போன்றவற்றுடன் வர்த்தகத்திற்கு ஏற்ற விதத்தில் தமது இணையத்தளத்தை மாற்றியமைத்தல் உடனடியாக ஆரம்பிக்க முடிவதுடன் வாடிக்கையாளர்களின் Orderகளை பொறுப்பேற்றலையும் ஆரம்பிக்க முடியும். இணையத்தளத்திற்குரிய மாற்றங்களை மேற்கொள்ளும் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் 15 நிமிடம் போன்ற குறுகிய காலத்திற்குள் முழுமையாக்கக் கூடிய மிகவும் மறையான நடவடிக்கை என்பதுடன் அனைத்து பாகங்களுக்கும் ஏற்ற விதமான வர்த்தகரின் ஒட்டுமொத்த இணைய பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், HNB ஊடாக கட்டணம் செலுத்துதலை பெற்றுக் கொள்வதுடன் வாடிக்கையாளர்களின் Orderகளை பாதுகாப்பாகவும் மற்றும் முறையாகவும் பெற்றுக் கொள்வற்கு சந்தர்ப்பம் கிட்டும்.

இந்த தளத்திற்காக பதிவுசெய்வதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கை மற்றும் தளத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம் என்பதுடன் மிகவும் சிறிய கட்டணம் மாத்திரமே பரிவர்த்தனைகளுக்கு அறவிடப்படும். கருத்திற்கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டமையானது எந்தவொரு வர்த்தகரிடமும் தற்போது காணப்படும் விநியோக சேவையுடன் தொடர்புகொள்வதற்கு ஏற்றவிதத்தில் அமைவதுடன் விநியோக நடவடிக்கைகளை நிறுவாத வர்த்தகர்களுக்கு மேலதிக கட்டணத்துடன் AppiGo ஊடாக மூன்றாவது பிரிவு விநியோக சேவைகளுக்கு செல்ல முடியும்.

வாடிக்கையாளர் சேவை மத்திய நிலையங்கள் 251ஐ நாடு முழுவதிலும் நடத்திச் செல்லும் HNB இலங்கையில் தொழில்நுட்ப ரீதியில் பாரிய புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியாகும். அண்மையில் வங்கி தொடர்ச்சியாக பல விருதுகளை வென்றதுடன் த பேங்கர் சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினையும் வென்றது. உள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 10 தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள HNB 2019ஆம் ஆண்டுக்கான விசேட நிறுவன குடிமகன் என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது. சர்வதேச கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியான HNBக்கு Moody’s Investors Serviceஇனால் B1 தரப்படுத்தலும் வழங்கப்பட்டது. அண்மையில் Fitch ratings மூலம் HNBஇன் தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு Fitch ratings இன் இரண்டு இடங்களைக் கடந்து மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள HNBக்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி

தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி

ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை வீழ்த்திய HNB Finance இன் விற்பனை சேவைகள் C பிரிவு அணி