வணிகம்

HNB உடன் கூட்டணி ஒன்றை கச்சாத்திட்டுள்ள கண்டி திரித்துவக் கல்லூரி

(UTV | கொழும்பு) –  இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களுக்கு தனது ஆதரவை விரிவுப்படுத்தி வரும் HNB கண்டி திரித்துவக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துடன் மற்றுமொறு முக்கிய கூட்டணியொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

HNB, Affinity கடனட்டை மூலம் கண்டி திரித்துவக் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குகிறது.

இதனுடன் கண்டி திரித்துவக் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவிற்கு வங்கி பங்காளராக HNB பணியாற்றுகிறது. மேலும் திரித்துவக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த திருத்துவம் 150 நிதி திரட்டலுக்கும் பங்களிக்கிறது.

HNB பிரதி பொது முகாமையாளர்- வாடிக்கையாளர் நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் வங்கி நடவடிக்கைகள், சஞ்ஜேய் விஜயமான்ன, HNB தலைமை கடன் அதிகாரி – நிரோஷ் பெரேரா. HNB வலையமைப்பு மற்றும் வணிக வளர்ச்சி நிர்வாகத்தின் தலைவர்- சுப்புன் டயஸ், HNB அட்டைகள் தலைவர் – கௌதமி நிரஞ்சன், கண்டி திருத்துவக் கல்லூரி அதிபர் அதி வண. ஆண்டகை ஆரலியா ஜெயசுந்தரா, TCK-OBA தலைவர்- சேனக அலவதுகம, TCK-OBA கேகாலை கிளை தலைவர் TCK-OBA, சபரகமுவ மாகாண ஆளுநர் டிகிரிகொப்பெகடுவ, அலோசகர் மற்றம் மேற்பார்வை குழு, Trinity 150 ஜெயதிஸ்ஸ ரத்வத்த மற்றும் திருத்துவ கல்லூரி OBA செயலாளர் – பிரசன்ன பலிஹவதன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கண்டி திருத்துவக் கல்லூரியானது உலகெங்கிலும் கல்வியின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனமாகும். அதற்கு இக்கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறி தற்போது பிரபல்யமான இடங்களில் சாதித்துக் கொண்டிருக்கும் நபர்களே இதற்கு அதாட்சியாவார்கள்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் பிரதி பொது முகாமையாளரும் வாடிக்கையாளர் நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் வங்கி நடவடிக்கைகள் – சஞ்ஜேய் விஜேமான்ன, கண்டி திருத்துவக் கல்லூரியின் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் அவர்களின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக OBA உடன் இணைந்து செயற்படுவதை பெருமையாக கருதுகின்றோம். இலங்கையின் அடுத்த தலைமுறை தலைவர்களின் திறன்களை வளர்ப்பதற்கான முக்கிய பணியை அவர்களின் பாடசாலையில் தொடரட்டும் என தெரிவித்தார்.

திருத்துவ கல்லூரி பழைய விளையாட்டு கழகத்தி;லுள்ள அனைத்து Affinity அட்டைதாரர்களுக்கும் HNB இன் அனைத்து வணிக பங்குதாரர்களும் சிறப்பு தள்ளுபடி பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய இலவச SMS மற்றும் இலவச சுகாதார, ஆயுள் மற்றும் வெளிநாட்டு பயண காப்புறுதி பாதுகாப்பும் அடங்கும். ஓவ்வொரு அட்டைதாரரும் ஒரு இலவச துணை அட்டையை பெற முடியும். ஆரம்பக் கட்டணமும் முதல் வருடத்திற்கான வருடாந்த கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

கண்டி திருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் அனுமதிக் கட்டணம் மற்றும் பாடசாலைக் கட்டணங்களை செலுத்துவதற்கு நெகிழ்வான விதத்தில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள இந்த அட்டை உருவாக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மூன்று, ஆறு அல்லது பன்னீரண்டு மாத தவணைக் கட்டணமாக செலுத்தமுடியும். மேலும் இந்தக் கட்டணங்களுக்கு எவ்வித வட்டியோ அல்லது கையாளுதல் கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கண்டி திருத்துவக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் சேனக்க அலவத்தேகம, எனக்கும் எனது OBA உறுப்பினர்களுக்கும் HNB உடன் கைகோர்க்க கிடைத்தமை பெரும் கௌரவமாகும். இந்த கூட்டாண்மை எதிர்காலத்தில் மிக சிறந்த பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களைப் பெறுவதை இது உறுதி செய்யும். என தெரிவித்தார். கண்டி திருத்துவக் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவின் வங்கி கூட்டாளராக HNB இணைவது குறிப்பிடதக்கது. மேலும் இளைய தலைமுறையினரிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்க மாணவ சேமிப்பு பிரிவொன்றை பாடசாலையில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக்;கொன்டுள்ள HNB இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும். இது டிஜிட்டல் வங்கியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. Fitch Ratings (Lanka) Ltd நிறுவனத்தினால் AA-(lka)இன் நீண்டகால தேசிய மதிப்பீட்டை HNB கொண்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி விருதுகளில் இங்கையின் சிறந்ந Sub-Coustodian வங்கியாக HNB அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆசிய வங்கியாளர் விருதுகளில் 11வது தடவையாகவும் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதை வென்றது. சவாலான பொருளாதார சூழல் மத்தியிலும் தன்னுடைய வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றது.

Related posts

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…

Sapphire Cluster கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்