வணிகம்

Health Life Clinic நவீன வசதிகளுடன் கொழும்பு 7இல் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

(UTV | கொழும்பு) – கொழும்பின் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ஹெல்தி லைஃப் கிளினிக், சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்தும் வகையில் இல. 139, தர்மபால மாவத்தை, கொழும்பு 07இல் உள்ள நவீன நோக்கம் கருதி புதிதாக கட்டப்பட்ட வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2005இல் நிறுவப்பட்ட ஹெல்தி லைஃப் கிளினிக் தனிப்பயனாக்கப்பட்ட நீரிழிவு கட்டுப்பாட்டு சிகிச்சையளிப்பு, சரும அழகு சாதன ஆலோசனைகள், குழந்தை மருத்துவம், பிசியோதெரபி, மனநலம், முதியோர் மருத்துவம், ஆப்டோமெட்ரிக் பராமரிப்பு, பாதக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிதல் மற்றும் செயல்திறன் மிக்க சுகாதார மேம்பாட்டு தீர்வுகள் போன்றவற்றிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட வளாகத்திற்கு இடம்மாறிச் சென்றுள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார சேவையை வழங்குவதற்கான எமது பொறுப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் கொழும்பு 07இல் ஒரு விசாலமான இட வசதி கொண்ட எமது விரிவாக்கமானது நோயாளர்களுக்கு வசதியான, பாதுகாப்பான சூழலில் மிக உயர்ந்த தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான எமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியென நாங்கள் நம்புகிறோம்” என ஹெல்தி லைஃப் கிளினிக்கின் தலைவர் டொக்டர் காயத்ரி பெரியசாமி தெரிவித்தார்.

அழகான சூழலில் நன்கு வெளிச்சமான உட்புறங்களுடன், சரும அழகு சாதன ஆலோசனைக் கூட வசதி, பலவிதமான நோயறிதல் முறைகள் மற்றும் சிகிச்சையளிப்பு கூட இடவசதிகள் மற்றும் நவீன கருவிகளும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. ‘6 by 6 Optics’ மற்றும் ‘Evolve Centre’ என்ற பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நவீன பேச்சு மற்றும் மொழி சிகிச்சை மற்றும் கற்றல் பிரிவும் இதில் அடங்கும்.

“ஹெல்தி லைஃப் கிளினிக்கில் நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகிய இருபாலாருக்கும் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையை அனுபவிக்கக் கூடிய வகையில் ஒரு நபரை மையமாகக் கொண்ட சிகிச்சை அணுகுமுறையை நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கிறோம். நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதிவாய்ந்த ஆலோசகர்கள் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு அவர்களின் அனைத்து மருத்துவ தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு வசதியான அமைப்பை உருவாக்க கடுமையாக முயற்சி செய்கின்றனர். எமது நீண்டகால நோயாளிகளில் பலர் மன நிறைவான சேவையைப் பெற்று முழு திருப்தியைக் கண்டு அவர்கள் முழு நிறைவடைவதற்கு முக்கிய காரணியாக இது அமைந்துள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெல்தி லைஃப் கிளினிக்கில் நீரிழிவு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அணுகுமுறைகள் பல ஆண்டுகளாக இந்த கிளினிக்கை விரும்பும் நோயாளிகளை சிறந்த விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கிளினிக்கின் பராமரிப்பு பெக்கேஜ்கள் நிபுணத்துவம் கொண்ட நீரிழிவு ஆலோசகர்களால் கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒரே விதமாக பல்வேறு அணுகுமுறையைகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றதோடு, அங்கு நோயாளிகளுக்கு தங்களைக் கவனித்துக் கொள்வதற்கு தேவையான அறிவைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ஒரு முக்கிய அம்சமாகும்.

ஹெல்தி லைஃப் கிளினிக்கின் பெக்கேஜ்களில் மிகவும் பிரபல்யமான Smard D நீரிழிவு நோயாளர்களுக்கான வருடாந்தர பராமரிப்பு பெக்கேஜில் முழு பரிசோதனை தீர்வு, காலாண்டுக்கு ஒருமுறை இரத்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைகள், கிளினிக்கிலிருந்து வழக்கமான நினைபூட்டுதல்கள் மற்றும் வீட்டில் இருந்தே இரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க இலவச குளுக்கோ மீட்டர் ஆகியவை இதில் அடங்கும்.

கிளினிக்கின் இரண்டாவது முக்கிய கவனமாக அமைவது குடும்ப மருத்துவமாகும், இதில் குடும்பங்கள் மற்றும் தனி நபர்கள் தங்கள் உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வை விரைவாக பராமரிக்க உதவும் ஒரு விரிவான சுகாதார நிகழ்ச்சி நிரலை கொண்டு செயற்படுத்தப்படுகிறது. ஹெல்தி லைஃப் கிளினிக் அனைத்து தனிநபர்களின் வாழ்க்கையிலும் ஒரு குடும்ப வைத்தியரின் தேவை குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு உந்துவிப்பதுடன், இது அன்றாட ஆரோக்கியத்தில் குறைந்த பணச் செலவில் மேற்கொள்ளப்படுவதனால் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் இது சிகிச்சைகள், பரிந்துரைகள் பற்றிய ஆலோசனையின் முக்கிய நபராகவும் செயல்படுதுடன் நோயறியவும் மற்றும் அதனைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கிறது.

ஆலோசனைக்காக கிளினிக்கிற்கு செல்லும் ஒவ்வொரு நோயாளியும் ஒரு தனிப்பட்ட சுகாதார பதிவை வைத்திருத்தல் வேண்டும், இது நோயளியின் குடும்ப ஆரோக்கிய வரலாறு, வாழக்கை முறை, விருப்பத்தேர்வுகள், முன் ஆலோசனை விபரங்கள், மனநல சுகாதார நிலை ஆகியவற்றுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். இது கிளினிக்கின் செயல்முறைகளில் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

மேலும், ஹெல்தி லைஃப் கிளினிக் பெருநிறுவன துறையில் கடமையாற்றுபவர்களுக்கு அறிவை வழங்குதல் மற்றும் ஆலோசனை வழங்குவதன் மூலம் சுகாதாரத்துக்கான தடுப்பு அணுகுமுறையை பெற்றுக்கொள்வதில் பல்வேறு வகையான பெருநிறுவன பெக்கேஜ்களை வழங்குகிறது; முதியோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் தீர்வுகள், பிசியோதெரபி அமர்வுகள், எடை நிர்வகிப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் 011 470 0700 அல்லது 077 351 1511 என்ற இலக்கத்தில் அழைப்பினை ஏற்படுத்தி கிளினிக்குடன் தொடர்பினை ஏற்படுத்தலாம்.

2005ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஹெல்தி லைஃப் கிளின் என்பது கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிறந்த சுற்றாடலில் அமைக்கப்பட்ட மதுத்துவ மனையாகும். நீரிழிவு பராமரிப்பு மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்த மருத்துவமனை, பெருநிறுவன ஆரோக்கியம், பிசியோதெரபி, ஆரோக்கியம், நோயறிதல் மற்றும் வயோதிப பராமரிப்பு ஆகியவற்றுக்கான விரிவான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

No description available.

Related posts

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி அபிவிருத்தி வலயம்

வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை

பாற்பண்ணை விவசாயின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை