உள்நாடு

“GotaGo போராட்டம் முடிவுக்கு”

(UTV | கொழும்பு) –   காலி முகத்திடலில் இடம்பெற்ற #கோட்டாகோஹோம் போராட்டம் அடையாளமாக வெற்றி பெற்றுள்ளதால், இனி அந்தப் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்த முடியாது என்றும், அந்தப் போராட்டத்தின் பங்களிப்பு முடிவுக்கு வரும் என்றும் கறுப்புத் தொப்பி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

போராட்டக் களத்தில் பல தரப்பினரால் அறிவிக்கப்பட்ட ‘காலிமுகத்திடலுக்கு அப்பால்’ தொடர் தீர்மானங்களை வெற்றிபெறச் செய்ய அகிம்சைப் போராட்டத்தின் புதிய பரிமாணத்தைத் தொடங்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் காலி முகத்திடலில் மாத்திரமல்லாமல் பரந்துபட்ட சமூக அரசியல் வெளியில் எமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சீர்திருத்தங்களை வென்றெடுக்கும் வகையில் இனிமேல் எமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அதற்காக ஒரு நோக்கில் பயணிப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் சமூகம் மற்றும் அரசியல் சமூகத்துடன் இணைந்து பரந்த சீர்திருத்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சீர்திருத்தங்களை வென்றெடுக்கும் வகையில் இப்போராட்டம் இனிமேல் அமுல்படுத்தப்படும் என்றும், அது ‘போராட்டம் 4.0’ என்ற புதிய பரிமாணத்தின் அகிம்சைப் போராட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்