விளையாட்டு

FIFA 2018 – நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

(UTV|RUSSIA)-21 வது பிபா உலக கிண்ண கால்பந்து போட்டி தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14 ஆம் திகதி தொடங்கி, நேற்று முடிவடைந்தது.

லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பீ’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்த்துக்கள் ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, ‘ஈ’ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, ‘எப்’ பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ‘ஜி’ பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, ‘எச்’ பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் ஆகிய அணிகள் லீக் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதன் மூலம் முன்னாள் உலக சாம்பியன்களான பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய ஆறு அணிகள் இந்த முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த உலக கிண்ண ‘எப்’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி மூன்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன், பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.

நான்கு முறை உலக கிண்ண வென்றுள்ள இத்தாலி அணி உலக கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

உலக கிண்ண கால்பந்து தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 2006 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இத்தாலி, 2010 ஆம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2010 ஆம் ஆண்டு வென்ற ஸ்பெயின், 2014 ஆம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியது. 2014 ஆம் ஆண்டு வென்ற ஜெர்மனி, இந்தாண்டு முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற பிரான்ஸ், 2002 ஆம் ஆண்டு முதல் சுற்றில் வெளியேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்-அவுட் சுற்று போட்டிகள் நாளை தொடங்குகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா, உருகுவே – போர்த்துக்கள் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெல்லும் அணிகள் முதல் காலிறுதி போட்டியில் மோதி கொள்ளும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய ரபாடா

இலங்கை – தென் ஆபிரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று

ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு