உலகம்

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு ஸைக்கோவ்-டி (ZyCoV-D) தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் கொவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவெக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மொடொ்னா, உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆறாவதாக ஸைடஸ் கேடில்லா நிறுவனம் தமது தயாரிப்பான மூன்று முறை செலுத்தக்கூடிய தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையகம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த ஜூலை முதலாம் ஆம் திகதி தமது கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களில் தங்களின் மூன்று முறை செலுத்தக்கூடிய தடுப்பூசியை விரிவாக பரிசோதனை செய்துவிட்டதாக ஸைடஸ் கேடில்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.

அத்துடன் இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் உலகின் முதல் மரபணு தடுப்பூசி என்ற அந்தஸ்தையும் இந்த தடுப்பூசி பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்

Related posts

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கின்றது

விளாடிமிர் புதின் 2036 வரை ரஷ்ய ஜனாதிபதி பதவியில் நீடிக்க வாய்ப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று