விளையாட்டு

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

(UTV | இந்தியா) – இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரில் இருந்து தான் முழுவதுமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொந்தக் காரணங்களினால் விலகுவதாகவும், தன்னை இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விடுவிக்கவும் அவர் நிர்வாகத்துக்குக் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றுமொரு சுழற்பந்துவீச்சாளர்

ஐபிஎல் வீரர்களுக்கும் தடுப்பூசிதான் ஒரே வழி

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால்