உள்நாடு

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

(UTV | கொவிட் -19) – COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் நிலையான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து COVID 19 தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்காக தேசிய இணையதளமொன்றை www.covid19.gov.lk.. என்ற பெயரில் முன்னெடுத்துள்ளது.

இதனை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA ஆரம்பித்துள்ளது.

COVID 19 காரணமாக நாட்டில் முன்நிகழ்ந்திராத நிலமையை கவனத்தில் கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற நம்பகமான ஆதாரங்களின அடிப்படையூடாக பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவது இதன் நோக்கமாகும்.

மேலும், இந்த இணையதளம் சுகாதார விடயங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல பொருளாதாரம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, சுற்றுலா, போக்குவரத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு , அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், சமூக சேமநலம், சட்டம் மற்றும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அயல்நாடு போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

இலங்கை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு

மினுவங்கொடை கொவிட் கொத்தணி : 186 பேர் பூரண குணம்