விளையாட்டு

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

(UTV | நியூசிலாந்து) – இருபதுக்கு-20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து இருபதுக்கு-20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ‘காலின் மன்றோ’ (COLIN MUNRO) தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக கருதப்பட்டு வருபவர் ‘காலின் மன்றோ’. இவர் நியூசிலாந்து அணிக்காக 1 டெஸ்ட் ஆட்டம், 57 ஒருநாள் ஆட்டங்கங்கள், 65 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அந்த அணியில் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன காலின் மன்றோ, கடைசியாக 2020-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூசிலாந்து அணிக்காக டி20 ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு எந்த ஆட்டத்திலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. குறிப்பாக வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் இவரின் பெயர் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் அதிரடி வீரர் காலின் மன்றோ, காலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.

மேலும், மூத்த வீரர் ராஸ் டெய்லரும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ‘காலின் மன்றோ’ தெரிவித்து உள்ளார். மேலும், எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வேதனையில் உள்ளேன்.

நியூசிலாந்து அணிக்காக என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடி விட்டதாக நினைக்கிறேன்” என்று ‘காலின் மன்றோ’ தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    

Related posts

ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்