உள்நாடு

CID முன்னாள் பணிப்பாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் [UPDATE]

(UTV | கொழும்பு) –  பிணை நிபந்தனைகள் பூர்த்தியாகாத நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை தொடர்ந்தும் இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பஹாமேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்றதாக போலி சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில் கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, ஷானி அபேசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை, தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச் சீட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை 62,677 பேர் கைது

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் குறித்து IMF அதிரடி அறிவிப்பு

editor

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்