பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
இந்த நாட்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தொடர்ந்து அழைக்கப்படுவதாகவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தார்.