உள்நாடு

CID இனால் கைது செய்யப்பட்ட அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எக்ஸ்ட்ரா செனொகா கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வந்து அதில் சில தரமற்ற திரவங்களை கலந்ததன் பின்னர் மக்களுக்கு செலுத்துவதாக அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பிலியந்தல பகுதியில் வைத்து நேற்று(25) இரவு அசேல சம்பத் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திங்கள் முதல் நடைமுறையாகும் சட்டங்கள்

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

தனக்கு பாரிய அச்சுறுத்தல் – ஹரின்