உள்நாடு

CEYPETCO தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி.யின் அனைத்து வகையான டீசலும் லீற்றருக்கு 15 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐ.ஓ.சியின் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 139 ரூபாவாகும்.

அத்துடன் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதம் அதிகரித்துள்ளது

இதற்கமைய ஐ.ஓ.சியில் ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 204 ரூபாவாகும்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கடந்த 6 ஆம் திகதியும் எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையில், இலங்கை கனிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி

editor

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்