உள்நாடு

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கிறது

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பது இந்த தருணத்தில் அவசியமானது என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெட்கோ எரிபொருட்களின் விலையை அரசாங்கம் திருத்தியமைக்கும் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சுமித் விஜேசிங்க, ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதில் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக சிபெட்கோ பெற்றோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]

பிலிப்பைன்ஸில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

நாட்டில் நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை – அலி சப்ரி