உள்நாடு

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினர்

(UTV | கொழும்பு) – பெற்றோலிய கூட்டுத்தாபன (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக இன்று முதல் அவர்களை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதோடு, ஒரு சில அசம்பாவிதங்கள் மற்றும் மயக்கம் காரணமான உயிரிழப்புகளும் அண்மைக்காலமாக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயங்களை கருத்திற் கொண்டு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

editor

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை