வணிகம்

CDB இனால் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அன்பளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையின் இளம் தலைமுறையினரை ஆளுமை மற்றும் திறன் படைத்த சர்வதேச குடிமக்களாக தரமுயர்த்தும் நோக்குடன், சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) நவீன வசதிகள் படைத்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்த வண்ணமுள்ளது. 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தனது முன்னணி சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ´CDB பரிகணக பியச´ ஊடாக, 11வது அன்பளிப்பை அண்மையில் மேற்கொண்டிருந்தது. குருவிட்ட, தேவபஹால பிரதேசத்தில் அமைந்துள்ள ர. ஸ்ரீ சரணஜோதி திஸ்ஸ வித்தியாலயத்துக்கு 1.5 மில்லியன் ரூபாய் முதலீட்டில் மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதையும் சேர்ந்த பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த குறைந்த வசதிகள் படைத்த பத்து பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளதுடன், தற்போதைய இந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தினூடாக மொத்த முதலீட்டுத் தொகையை 13.5 மில்லியன் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த திட்டங்களினூடாக சுமார் 12,500 மாணவர்கள் அனுகூலம் பெற்றுள்ளனர். நவீன வசதிகள் படைத்த ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தில், ஸ்மார்ட் பலகைகள், கணினிகள், அச்சுப்பிரதி இயந்திரங்கள், காகிதாதிகள், ஸ்கானர்கள், கணினி மேசைகள், கதிரைகள் மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளான இணைய வசதி போன்றன அடங்கியுள்ளன. இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களில் காணப்படும் மற்றுமொரு முக்கிய அங்கமாக, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மேம்படுத்தப்படுவதுடன், அருகாமையில் காணப்படும் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொழில்நுட்பத்தின் அனுகூலத்தை பெற்றுக் கொள்ள முடிகின்றது. தகவல் தொழில்நுட்ப மையங்களாக இந்த ஆய்வுகூடங்கள் திகழ்வதுடன், முழுச் சமூகத்துக்கும் அறிவை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையங்களாகவும் இவை அமைந்துள்ளன.

தேசத்தின் பரந்தளவு உள்வாங்கப்படும் தன்மை எனும் CDB இன் இலக்கு இந்த ஆய்வுகூடத்தினூடாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன் தெரிவித்தார். ´நிதிசார் வலுஇல்லமாக திகழும் எமது இலக்கு, தொழில்முயற்சிசார் புத்தாக்கம் மற்றும் தொழிலதிபர்களின் திறன்களை ஊக்குவிப்பது போன்றவற்றில் தங்கியுள்ளதுடன், எமது இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதனூடாக மாத்திரமே இந்த இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம் என்பது இளைஞர்களுக்கு தகவல்களை பெற்றுக் கொள்ளக் காணப்படும் முக்கிய மூலமாக அமைந்துள்ளதுடன், இந்த வசதிகளை பெற்றுக் கொள்ள பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு CDB உதவிகளை வழங்குகிறது.´ என்றார்.

சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் சேபால குருப்பு ஆரச்சி, சரணஜோதி திஸ்ஸ வித்தியாலயத்தின் அதிபர் அசோக உதயங்க, CDB இன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக அவர்களின் பாடசாலைக்கும் கிராமத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அனுகூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்கு கிடைத்துள்ள மாபெரும் அன்பளிப்பாக இது அமைந்துள்ளதுடன், மாணவர்களுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெரிதும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். அதிபர் அசோக உதயங்க இந்த திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ´இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினூடாக எமது முழுச் சமூகத்துக்கும் பரந்தளவு பயிலக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய உலகை தொழில்நுட்பம் முன்நோக்கி செலுத்துகிறது. இந்த வாய்ப்பை எமக்கு CDB வழங்கியுள்ளதனூடாக, இலங்கையில் மட்டுமின்றி, பிராந்திய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் காணப்படும் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள நாம் தற்போது தயாராகியுள்ளோம்´ என்றார்.

´CDB பரிகணக பியச´ என்பது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பேண்தகைமை செயற்திட்டமாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் பிரதான சமூக பொறுப்புணர்வு திட்டத்தினூடாக, ஐக்கிய நாடுகளின் நிலைபேறாண்மை அபிவிருத்தி இலக்குகளான (SDGs) தரமான கல்வியை சகலருக்கும் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கமைய காணப்படுகிறது. சம அளவிலான வாய்ப்புகள் தொழில்நுட்ப அணுகலுடன் பெருமளவு அதிகரிக்கும் என்பதுடன், இதனூடாக ஐக்கிய நாடுகளின் ஏனைய பதினாறு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் தாக்கத்தினை எய்த உதவியாக அமைந்துள்ளதாக தென்னகோன் குறிப்பிட்டார். அவர் மேலும் விவரிக்கையில், நிலைபேறான வலுவூட்டல் மற்றும் அறிவுசார் அம்சங்கள் போன்றன நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. ´CDB பரிகணக பியச என்பதனூடாக, தகவல் தொழில்நுட்ப அறிவை கிராமிய இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்க முடிவதுடன், தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலைக்கு அவர்களை தரமுயர்த்தவும் உதவியாக அமைந்துள்ளது´ என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாகிஸ்தான் தூதுவராலய பதில் உயர் ஸ்தானிகர் – நிதி அமைச்சர் இடையே சந்திப்பு

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே