Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மந்த போசனையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தால் நிதியொதுக்க முடியாமல் போயுள்ளது – சஜித்

editor
இலங்கையில் சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிறை குறைவான மற்றும் வளர்ச்சி குறைவான (கட்டையான)...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும் – இம்ரான் எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் வெகுவாகப் பாதிக்கப்படும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை (02) கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்...
அரசியல்உள்நாடு

கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு

editor
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும்...
அரசியல்உள்நாடு

“மதுபான கோட்டாக்களை பெற்றுக்கொண்டோரின் விபரங்கள் சஜித்தின் ஆட்சியில் வெளியிடப்படும்” – மன்னாரில் தலைவர் ரிஷாட்!

editor
மதுபான “லைசன்ஸ்களுக்காக” ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான “கோட்டாக்களை” பெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மை வாக்குகளாலேயே, ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன் நடந்துகொண்டார் கோட்டா.  மதங்களைப் புண்படுத்துமளவுக்கு அவரது மனநிலை இறுமாப்படைந்தது. கொரோணாவில் மரணித்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தீயில் எரித்தார். இந்த அராஜகத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர். நாங்கள் செய்தவற்றை நிறுத்துவதற்கென்றே, இங்கு ஒரு இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுக்கரைக்குளம், வியாயடிக்குளம், நெடுங்கண்டல் குளம் மற்றும் அஹத்திக்குளம் போன்ற விவசாயக் குளங்களைப் புனரமைத்து, இருபோக நெற்செய்கைக்கு வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். இங்கே வெள்ளமாகத் திரண்டுள்ள மக்கள் பணத்துக்காகவோ, சாப்பாட்டுப் பார்சல்களுக்காவோ சேர்த்த கூட்டமல்ல. சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும் ஒரே வேட்கையோடு சேர்ந்த கூட்டம். சஜித்தின் வெற்றிக்காக அமோக ஆதரவளித்த பெருமையில் முதலிடம் பிடிக்க, மன்னார் மாவட்ட மக்கள் முந்திக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வோம்”என்றார். -ஊடகப்பிரிவு...
அரசியல்உள்நாடு

இனவாதத்தை தூண்டிவிட ஒரு தரப்பினர் நல்லிணக்க சட்டமூலத்தை தூக்கிப் பிடிக்கிறது – நீதியமைச்சர் அலி சப்ரி

editor
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் ஊடாக  எவருக்கும் சார்பாக செயற்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைகளையே முன்வைத்துள்ளோம். இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள்...
அரசியல்உள்நாடு

வடகிழக்கின் அபிவிருத்திக்காக தாமதிக்காது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம் – சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு.

editor
யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கடந்த காலங்களில் இருந்த எந்த ஒரு தலைவருக்கும் முடியாமல் போயிருக்கின்றது. எனவே தான் ஜனாதிபதியான உடனே வட கிழக்கு மாகாணங்களை...
அரசியல்உள்நாடு

சஜித், அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து சம்பள அதிகரிப்பு யோசனையை நீக்கி விடுங்கள் – ஜனாதிபதி ரணில்

editor
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி...
அரசியல்உள்நாடு

IMF குறித்து அனுரவின் நிலைப்பாடு

editor
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
அரசியல்உள்நாடு

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக சபைக்கு அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.

editor
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (04) ஆம்...