அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று (29) புதன்கிழமை இரவு காலமானதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக நேற்று (28) சேர்க்கப்பட்டிருந்தார்..

வீட்டில் தவறி வீழ்ந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில் அதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்கும் ​போது அவருக்கு வயது 82 ஆகும்.

Related posts

மட்டக்களப்பில் இயற்கையான சரணாலயத்தில் சஞ்சரித்துள்ள வெளிநாட்டு பறவைகள்

editor

உயிர்காக்கும் ‘சக்தி’ இலங்கையினை நோக்கி வருகிறது

பசிலின் தீர்மானம்