உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்” என்ற கருத்தின் ஊடாக இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.

Related posts

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை ஒப்படைக்கும் இறுதிநாள் இன்று

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!