வணிகம்

BCS அங்கீகாரம் கொண்ட பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் முதலாவது கல்வி நிறுவனம் IIT

(UTV|COLOMBO)-இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), பிரித்தானிய கணினி சங்கத்தின் (British Computer Society – BCS) அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு கற்கைநெறிகளை இலங்கையில் வழங்கவுள்ள முதலாவது கல்வி நிலையமாக மாறியுள்ளது.

BCS இன் அங்கீகாரத்துடன் அதன் தகவல் தொழில்நுட்ப பட்டய கற்கை நிலையமான (Chartered Institute for IT) வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்துடன் (University of Westminster) இணைந்து நான்கு கற்கைநெறிகளை IIT வழங்குகின்றது. மென்பொருள் பொறியியல் துறையில் BSc/BEng (Hons) in Software Engineering, கணினி விஞ்ஞானத் துறையில் BSc (Hons) in Computer Science, வியாபார தகவல் முறைமை துறையில் BSc (Hons) in Business Information Systems மற்றும் உயர் மென்பொருள் பொறியியல் துறையில் MSc Advanced Software Engineering ஆகிய கற்கைநெறிகளை அது வழங்குகின்றது. இந்த அங்கீகாரத்தின் காரணமாக மேற்குறிப்பிட்ட 4 கற்கைநெறிகளில் எந்தவொன்றையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்கின்ற பட்டதாரிகள் Chartered IT Professional (CITP) பதிவுக்கு தேவையான கல்வித் தகைமையை முழுமையாகக் கொண்டிருப்பர். உரிய தொழில்சார் அனுபவ தேவைப்பாடுகளை அவர்கள் பூர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு உள்ள அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட இக்கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்கின்ற பட்டதாரிகள் CITP தகைமையை விரைவாக பெற்றுக்கொள்ளும் நன்மையைக் கொண்டுள்ளனர். அத்துடன் இப்பட்டதாரிகள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்ற சமயத்தில் BCS (MBCS) என்ற தொழில்சார் அங்கத்துவத்தையும் பெற்றுக்கொள்ளும் தகைமையைக் கொண்டுள்ளனர்.

மேலும் கணினி விஞ்ஞானம் மற்றும் மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்புக்களை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்கின்ற பட்டதாரிகள் Chartered அல்லது Incorporated Engineer (CEng or IEng) தகைமையையும் விரைவாக அடையப்பெறும் வாய்ப்பினைக் கொண்டுள்ளனர்.

BCS அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புக்கள், தகவல் தொழில்நுட்ப தொழில்சார் துறையில் உயர் கல்வி கற்கைநெறிகளில் சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தரத்திற்கு ஈடாக உள்ளதுடன், அவற்றிக்கு பங்களிப்பும் வழங்குகின்றன. மாணவர்கள் மற்றும் தொழில்தருநர்கள் மத்தியில் தரத்தின் அடையாளத்தை அது வழங்குவதுடன், அவற்றை வழங்குகின்ற கல்வி ஸ்தாபனங்களுக்கு சுயாதீன இனங்காணல் அங்கீகாரத்தையும் வழங்குகின்றன. பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விரிவான மதிப்பீட்டு நடைமுறையை அடுத்தே IIT இற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கற்கைபீடம், வளங்கள், போதனா மூலங்கள் மற்றும் பாட வேலைகள் போன்ற உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் அனைத்து அம்சங்களையும் BCS கவனத்தில் கொள்வதுடன், அங்கீகார அந்தஸ்தை வழங்குவதற்கு முன்பதாக தமது இறுதி நேரடி விஜயத்தின் போது விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் சுயாதீன நேர்காணல்களையும் முன்னெடுக்கின்றது.

தகவல் சமூகத்திற்கு இடமளிக்கும் இலக்குடன் தகவல் தொழில்நுட்பத்திற்கான பட்டயக் கற்கைநிலையமாக (Chartered Institute), BCS தொழிற்பட்டு வருகின்றது. தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் நடைமுறை ஆகியவற்றின் மேம்பாட்டினூடாக பரந்தளவில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை இந்நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. பாடநெறி உள்ளடக்கம், பயிற்சி, பரீட்சைகள் மற்றும் அங்கீகார சான்றிதழ் முறைமைகள் ஆகியவற்றின் மேன்மைக்கான தராதரத்தை ஏற்படுத்தி, தகவல் தொழில்நுட்பத் துறையில் மக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகம் ஆகியன தமது திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்திக்கொள்ள அது உதவுகின்றது. தகவல் தொழில்நுட்ப தகைமைகள் மற்றும் சான்று அங்கீகாரங்கள் ஆகியவற்றை வழங்கும் ஒரு சர்வதேச ஸ்தாபனம் என்ற வகையில், தகவல் தொழில்நுட்ப தொழில் சார்ந்தவர்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மாணவர்கள் அடங்கலாக உலகெங்கிலும் 70,000 அங்கத்தவர்களை BCS கொண்டுள்ளது.

இச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் IIT பீடாதிபதியான நயோமி கிறிஷ்ணராஜா அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், ´எமது பட்டப்படிப்பு கற்கைநெறிகள் British Computer Society இனால் அங்கீகரிக்கப்படுகின்றமை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒரு வரப்பிரசாதமாகும்.

IIT இல் நாம் வழங்குகின்ற தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு கற்கைநெறிகள் எந்த அளவிற்கு உயர் தரம் மிக்கவை என்பதை இது தெளிவாக காண்பிக்கின்றது. BCS இன் தொழில்சார் மதிப்பு மற்றும் ஒப்பீட்டளவிலான தராதரம் ஆகியன ஏனையோர் மத்தியில் எமது பட்டதாரிகளை தனித்துவமாக திகழச் செய்வதுடன், தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்கின்ற போட்டித்திறன் கொண்ட வர்த்தகச்சூழலில் அவர்களின் தொழில்வாய்ப்பு மற்றும் தம்மை சந்தைப்படுத்திக் கொள்ளும் திறனை மேம்படுத்த உதவுகின்றது,´ என்று குறிப்பிட்டார்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது உள்வாரி மேற்பட்டப்படிப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster (UOW), Robert Gordon University மற்றும் Canterbury Christ Church University ஆகியவற்றின் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்ற, விருதினை வென்றுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வலுவூட்டுவதில் IIT முக்கியமான பங்கு வகித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு 3,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை IIT உருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் 250 இற்கும் மேற்பட்ட ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்

நெல் விற்பனை நடவடிக்கை ஆரம்பம்