Author : editor

அரசியல்உள்நாடு

வேலுகுமாருக்கு எதிரான பொய்யான பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

editor
தனக்கு சேறுபூசும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

சஜித்தை வெல்ல வைப்பது தொடர்பில் ஹரீஸ் எம்.பி தலைமையில் நற்பிட்டிமுனையில் கூட்டம்.

editor
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தேர்தல் குழுக்களின் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட...
அரசியல்உள்நாடு

18 ஆம் திகதி மூன்று நகரங்களில் அநுரவின் மாபெரும் பேரணி.

editor
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரத்தை கம்பஹா, களுத்துறை, நுகேகொட ஆகிய மூன்று நகரங்களிலும் மூன்று பிரதான பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. குறித்த தேர்தல் பிரசாரங்கள்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், நடுநிலையாகவே இருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு...
அரசியல்உள்நாடு

தயாசிறிக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி

editor
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிடுவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (05) தயாசிறி ஜயசேகரவிற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி – திஹாரியில் ரிஷாட் எம்.பி

editor
முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புதன்கிழமை (04) திஹாரியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,“உலமா என்ற போர்வையில், சஹ்ரான் காடைக்குழு செய்த இழி செயலால், முஸ்லிம்கள் அனுபவித்தவற்றை எண்ணிப்பாருங்கள். இளைஞர்களை தவறான உணர்ச்சிப்பாதைக்குள் ஈர்க்க முனையும் அரசியல் சித்தாந்தம் முழு நாட்டுக்குமே ஆபத்தானது. இவ்வாறு இருக்கையில், முஸ்லிம் தலைமைகளை வீணாக விமர்சிக்கும் ஒரு சில உலமாக்கள் விடயத்திலும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியுள்ளது. ஆயுதக் கவர்ச்சியில் அகப்பட்டு, முஸ்லிம் இளைஞர்கள் சீரழிவதையும் சமூகம் நாசமடைவதையும் தவிர்ப்பதற்காகவே, பெருந்தலைவர் அஷ்ரப் தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார்.  சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்கவில்லை. இதனால், நமது சமூகம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், தன்னைத் தானே உலமாவென சுயமகுடம் சூட்டிய சஹ்ரானின் செயற்பாடு, முழு முஸ்லிம்களையுமே சீரழித்தது. ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மார்க்கமாகவும் சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் கூலிப்படைகள் எடுத்த இந்த முயற்சிகளை அடியோடு எதிர்த்தோம். இதனால், என்னைச் சிறையில் அடைத்தனர். எனது குடும்பத்தையே பழிவாங்கி வெஞ்சம் தீர்த்தனர். கொரொனா ஜனாஸாக்களை எரித்தபோதும் நாங்களே கொதித்தெழுந்தோம். அரபு நாடுகளோ, முஸ்லிம் ஆட்சியாளர்களோ எதையும் பேசவில்லை.அமைச்சர் அலிசப்ரியோ, தொலைபேசியை “ஓப்f” செய்துவிட்டு ஒளித்துவிட்டார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் நாங்களே மீள்குடியேற்றினோம்.  கண்டி, திகனை, அழுத்கமை மற்றும் அம்பாறை பற்றி எரிந்த வேளையில் களத்தில் நின்று காரியமாற்றியதுடன், நெருப்பை அணைத்ததும் நாங்களே! இவற்றை மறைத்துவிட்டு, நாங்கள் எதையும் செய்யவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்துவதைநிறுத்துங்கள்.  சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் சகல சமூகங்களுக்கும் நன்மைகிட்டும். ரவூப் ஹக்கீம், மரிக்கார், முஜிபுர்ரஹ்மான், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கபீர்ஹாஸிம், மனோகணேசன், ராதாகிருஷ்ணன், திகாம்பரம் மற்றும் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட சகலரும் எம்மிடமே உள்ளனர்” என்று கூறினார். -ஊடகப்பிரிவு...
அரசியல்உள்நாடு

தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும் – சஜித்

editor
எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார விருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு...
அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டத்தை மீறிய 22 பேர் கைது

editor
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று...
அரசியல்உள்நாடு

கவலைப்பட வேண்டாம் – நான்கு பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும் – அனுர

editor
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெற்றி...
அரசியல்உள்நாடு

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம்.

editor
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று வியாழக்கிழமை (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய...