உள்நாடு

A\L பரீட்சைக்கு சென்ற காதலி மீது அசிட் வீசிய காதலன்

(UTV | கேகாலை ) –  A\L பரீட்சைக்கு சென்ற காதலி மீது அசிட் வீசிய காதலன்

A\L பரீட்சைக்கு தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பரீட்சை நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவியின் மீது அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞன் ஒருவர் அசிட் வீச முயன்ற சம்பவம் கேகாலையில் பதிவாகியுள்ளது

இவ்வாறு குறித்த இளைஞன் அசிட் வீச முற்பட்ட போது அசிட் கொட்டியதில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞன் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த மாணவி கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு தனது தந்தையுடன் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை பரகம்மன பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மாணவியின் கழுத்தை பிடித்து நெரித்ததோடு அவரது முகத்தில் அசிட் வீச முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் தந்தை, இளைஞருடன் சண்டையிட்டதால் ஆசிட் மூவர் மீதும் கொட்டியு ள்ளது. இதனையடுத்து மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி குறித்த மாணவியின் தாயார் தெரிவிக்கையில், தனது மகள் சில காலமாக குறித்த இளைஞருடன் காதல்தொடர்பில் இருந்ததாகவும் அதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும்,
மேலும் மகள் கல்வியை தொடர்வதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததுடன், மகள் வேறு ஒருவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு கூட குறித்த இளைஞன் தனது மறுப்பை தெரிவித்ததாகவும்,
இதனால், காதலனின் கடுமையான விதிமுறைகளால், அந்த இளம்பெண் உறவை முறித்துக் கொள்ள முயற்சித்ததால், ஆத்திரமடைந்த இளைஞன், மாணவி மீது ஆசிட் வீச்சு நடத்த முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்!

புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்.

பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது