வணிகம்

A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது

(UTV | கொழும்பு) – கடந்த ஜூன் மாதம் 2021 இல் A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.

சர்வதேச மற்றும் உள்ளூர் செய்திகளை வழங்கும் A24 செய்தி நிறுவனம், தற்போது இலங்கையில் பல தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களுக்கு மிகவும் நம்பகமான செய்தி வழங்குநராக மாறியுள்ளது.

எமன், ஈராக், சோமாலியா, லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம் பெற்ற உள்நாட்டு போர் மற்றும் மோதல்களை உடனுக்கு உடன் களத்தில் இருந்து தகவல்களை A24 செய்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

“A24 செய்தி நிறுவனம் இலங்கையின் தனியார் மற்றும் அரச துறை சார்ந்த முக்கிய செய்தி ஊடகங்கள் மற்றும் இணையதளங்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

இலங்கையில் எமது சேவையை எதிர்வரும் இரண்டாவது காலாண்டில் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.

எங்களது செய்திகள் சமகால விவகாரங்கள், மனிதாபிமான, பொருளாதார மற்றும் சமூக செய்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என A24 செய்தி நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெயனி சமரக்கொடி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.”

மேலும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய செய்தி வழங்குநர்களில் ஒன்றாக எங்களின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். பல பிரபலமான ஊடகங்களுடனான சிறந்த ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகள் என A24 செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல் அஜ்லோனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு A24 செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும் – NewsDesk@a24na.com 

Related posts

யாழ்ப்பாணத்திற்கும் அதிவேக நெடுஞ்சாலை

அடுத்த வாரம் நெல் கொள்வனவுக்கான நடமாடும் சேவை ஆரம்பம்…

பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்