வகைப்படுத்தப்படாத

A/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்…

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சையின்  பெறுபேறுகள் சற்றுமுன்  இணையத்தில் வெளியாகியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி , கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம்.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் ​நேற்றிரவு வெளியாகியுள்ளன.

இதன்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன் பெற்றுள்ளார்.

தாம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றமை தொடர்பில் அவர்  மகிழ்ச்சி வெளியிட்டார்.

விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடத்தினை மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி திலினி சந்துனிகா பலிகக்கார அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றார்.

வணிகப் பிரிவிலும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவியான துலானி ரசன்திகா பெற்றுக் கொண்டார்.

அதேநேரம் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே முனிந்தவங்ச தேரர் பெற்றுக் கொண்டார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் இடத்தை மாத்தறை – மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவர் பாரமி பிரசாதி சத்னசினி ஹெட்டிராச்சி பெற்றுக் கொண்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று

இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் – ஈரான்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.