கிசு கிசு

முருங்கை கீரையை அவித்து உண்ட தம்பதியினர்?-கவலையில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

(UTV|COLOMBO)-அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் ஒரு தம்பதியினர் உணவுக்கு வழியின்றி முருங்கை கீரை அவித்து உண்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த செய்தி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியிருந்ததுடன், அது சம்பந்தமாக விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்து, விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

உண்மையை உறுதிப்படுத்தாமல் அந்த செய்தி வெளியிட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உண்மையில்லாத இந்த செய்தி வெளியாகியதன் காரணமாக நாட்டுக்குள் ஏற்பட்ட சிக்கலான நிலைமை தொடர்பில் கவலையடைவதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஈஸ்டர் தாக்குதல் : அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே [VIDEO]

நாலக சில்வாவுடன் சரத் பொன்சேகாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு?

தனஞ்சயவின் தந்தை படுகொலை : சந்தேக நபர் கைது