கேளிக்கை

சீன நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி

(UTV|INDIA)-கீர்த்தி சுரேஷ், சீன நடிகருக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரியதர்‌ஷனின் கனவுப்படம் ‘மரக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’. 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.

குஞ்சலி மரக்கார் வேடத்தில், மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

சண்டக் கோழி 2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் தன்னை அறிமுகப் படுத்தியவர் பிரியதர்‌ஷன் என்பதால், அவர் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என செய்தி வந்தது. ஆனால் அவர் சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?(photo)

பிரபாஸ் கெஸ்ட் ஹவுஸ் பறிமுதல்

வைரலாகும் விஷாலின் ‘லத்தி’ [VIDEO]