கிசு கிசுகேளிக்கை

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

(UTV|COLOMBO)-2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற மானுஷி சில்லர் உள்ளிட்ட Miss World Organization உயரதிகாரிகள் குழு கடந்த 30ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போதே 2020 அல்லது 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா 2வது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யா

மஹிந்தவின் வீட்டை கோரும் கோட்டா