சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லாவை குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு செல்லுமாறு தீர்ப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் 2018.08.14 ஆம் திகதி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு தினைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதிகளினால் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் கட்டிட நிர்மாண நிறுவனத்திற்கு எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில் பொலிஸ் மா அதிபர் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சவூதிஅரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக் கழகம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. இதில் லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்த வேலைகளை அதன் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து இதன் கட்டுமானப் பணிகள் பிரிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த பிரதி அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்மாணப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி நசீம் கிம்மத், சட்டத்தரணி எம்.எம்.முகமட் ராசீக் ஆகியோர்களும் மன்றில் தோன்றியிருந்தனர்.

இவ்வழக்கில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற அமர்வு காரணமாக வருகை தரவில்லை என்பதுடன், இதில் ஹிராஸ் அஹமட், முகம்மட் தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகிய மூவரும் சமூகமளித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

ரணிலுடன் 80 பேர் வெளிநாடுக்கு செல்ல தயார் நிலையில்…!