வகைப்படுத்தப்படாத

55 வருடங்களுக்குப் பின்னர் -இயற்பியலுக்கான நோபல் பரிசு பெண்ணொருவருக்கு

(UTV|CANADA)-55 வருடங்களுக்குப் பின்னர் முதல்தடவையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லேண்ட் (Donna Strickland) என்ற பெண்மணியே இந்த வருடத்துக்கான நோபல் பரிசைப் பெறுகின்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஜெராட் மௌரௌவ் ஆகியோருடன், டொக்டர் டோனா ஸ்டிரிக்லண்ட் இந்தப் பரிசைப் பகிர்ந்துகொள்கிறார்.

Laser Physics எனப்படும் சீரொளி இயற்பியல் துறையில் ஆற்றிய பணிக்காகவே, இயற்பியலுக்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவும் Optical Tweezers (ஒப்டிக்கல் டிவீசர்ஸ்) எனப்படும் ஒருவகை லேசர் தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1903 ஆம் ஆண்டு மேரி க்யூரி (Marie Curie), 1963ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் (Maria Goeppert Mayer) ஆகிய இருவருமே இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற பெண்களாவர்.

இந்தவரிசையில், டொக்டர் டோனா ஸ்டிரிக்லண்ட், இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் 3ஆவது பெண்ணாகப் பதிவாகியுள்ளார்.

இவ்வாண்டுக்கான நோபல் பரிசுகளில், புற்றுநோய்க்கான ‘இம்யூன் செக் பொயிண்ட் தெரபி’ எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தித் தடை உடைப்பு சிகிச்சை என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை எனவும் வியக்கத்தக்க பலன்களை இது தருவதாகவும் நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகடமி தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

‘love mother’ who adopted 118 children jailed for fraud

දිවයින පුරා බීමත් රියදුරන් 279 දෙනෙකු අත්අඩංගුවට

காலநிலை