சூடான செய்திகள் 1

நான் மன நோயாளி இல்லை…

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யவதற்கு எந்தவொரு சதி திட்டமும் இடம்பெறவில்லை என வரக்காபொல நா செவன சதஹாம் மடாலயத்தின் விகாரதிபதி சூரியவெவ சுமேத தேரர் தெரிவித்துள்ளார்.

கொலை சூழ்ச்சி திட்டம் தொடர்பில் தகவலை வெளிப்படுத்திய ஊழல் ஒழிப்பு படையணியின் செயல் பணிப்பாளர் நாமல் குமார, முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் வரக்காபொல நா செவன சதஹாம் மடாலயத்தின் நிகழ்வொன்றுக்காக அழைத்து வருவதற்கு வலுவான முயற்சி இடம்பெற்றுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து வெளிப்படுத்தினார்.

எனினும் இதுபோன்ற எந்தவொரு சூழ்ச்சி திட்டங்களும் இடம்பெறவில்லை என வரக்காபொல நா செவன சதஹாம் மடாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் விகாரதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊழல் ஒழிப்பு படையணியின் செயல் பணிப்பாளர் நாமல் குமார, தனக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கினார்.

விசாரணைகளை நடவடிக்கைகளை தாமதிக்கும் நோக்கிலேயே இந்த போலியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!