வணிகம்

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

(UTV|COLOMBO)-உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுமார் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெங்கு செய்கை அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் தரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளதாக சபையின் தலைவர் கபில யகன்தாவல தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் இதுவரையில், சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மூலம், 75 வீதமானவை நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சந்தைகளில் காணப்படும் பெரும்பாலான தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியின் மூலம் 3, 960 கோடி ரூபா வருமானம்

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு