சூடான செய்திகள் 1

புகையிரத பயண கட்டணங்கள் அநீதியான முறையில் அதிகரிப்பு….

(UTV|COLOMBO)-தொடருந்து பயண கட்டணங்கள் 40-50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநீதியான முறையில் தொடருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுதவிர, பருவகால சீட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15சதவீத தொடருந்து பயண கட்டண அதிகரிப்பு நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய, 3ம் வகுப்பின் குறைந்த பயணக்கட்டணமான 10 ரூபாவில் எந்த விதமாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

2ஆம் மற்றும் முதலாம் வகுப்புக்களின் ஆரம்ப பயணக் கட்டணங்களான 20 ரூபா மற்றும் 40 ரூபாவிலும் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து நிலையங்களுக்கிடையே நிலவும் தூரத்திற்கமைய பயண கட்டங்களில் மாற்றம் ஏற்படும்.

இதன்காரணமாக சில இடங்களில் 10 ரூபா அறவிடப்பட்ட தொடருந்து பயண கட்டணங்கள் 15 ரூபாவாக அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயண கட்டண அதிகரிப்புக்கு இணையாக பருவகால சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

இன்று முதல் சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்…

தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று (20)