கிசு கிசு

மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்?

(UTV|AMERICA)-அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

’ஐ டச் மைசெல்ப்’ பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

’ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். இப்போது இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார்.

’பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தாம் நேர்மையானவர்கள் : திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸாரை கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்த மருத்துவர்…

இஸ்ரேலை நியாயப்படுத்தும் விமல்