சூடான செய்திகள் 1

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டினர்.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் என்ற குறித்த இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கலேவல வாகன விபத்தில் 11 பேர் காயம்

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.