கிசு கிசு

விமானம் நடுவானில் பறந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபர்…

(UTV|INDIA)-டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ‘கோ ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பேர் பயணம் செய்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்தார். பின்னர் கழிவறை என நினைத்து விமானத்தின் பின்புற கதவை திறக்க முயன்றார்.

அதைபார்த்த சக பயணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கு வந்த விமான ஊழியர் அந்த பயணியை தடுத்து நிறுத்தினார். கேபின் அறையின் காற்றழுத்தம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இல்லாவிடில் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும்.

இச்சம்பவம் கடந்த 22-ந்தேதி நடந்தது. இதற்கிடையே விமானம் இரவு 7.35 மணிக்கு பாட்னா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதையடுத்து அந்த வாலிபர் தொழிற் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அஜ்மீரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிவது தெரியவந்தது.

முதல் விமான பயணம் என்பதால் கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முயன்றதாக கூறினார். வேறு பயங்கரவாத நடவடிக்கை எதுவும் இல்லை என்றார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மைத்திரி – விஜயகலா சந்திப்பு பிழைக்குமா?

புத்தளத்தில் உலாவும் ராட்சத மலைப்பாம்பு…

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]