சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் விசேட உரை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸினால் முன்வைக்கப்படும் அறிக்கையின் பின்னர் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதியானதன் பின்னர் 4 ஆவது தடவையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்குகொள்ளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த உரையில் விசேடமாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பிலான புதிய யோசனையொன்று முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் போர் குற்றம், அதிலிருந்து பாதுகாப்புத் தரப்புக்களை மீட்பது மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் என்பன பற்றியும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்துவதாக அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது முன்வைக்கப்படவுள்ள யோசனை அனைத்து தரப்பினருக்கும் இடையில் சர்ச்சையான நிலைப்பாடுகளை தோற்றுவிக்கக் கூடும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலி வீதியை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்

107 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான ஈரானியர்கள் விளக்கமறியலில்